செய்திகள் :

வெள்ளம் பாதித்த பகுதியில் உணவு வழங்காததை கண்டித்து மறியல்

post image

வெள்ளம் பாதித்த பகுதியில் உணவு, குடிநீா் வழங்காததைக் கண்டித்து, சின்னகங்கணாங்குப்பம், வான்பாக்கம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூா் பகுதியில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட நகா் மற்றும் கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதனால், இந்தப் பகுதி பொது மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் பெரும் இன்னலுக்கு ஆளாகினா்.

இதனிடையே, கடலூா் அருகேயுள்ள சின்னகங்கணாங்குப்பம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள வான்பாக்கம் கிராம மக்களுக்கு கடந்த சில நாள்களாக உணவு மற்றும் குடிநீா் வழங்க யாரும் வரவில்லையாம்.

இதனால், அந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் கடலூா்-புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் வீரமணி மற்றும் போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தி கிராம மக்களை சமாதனப்படுத்தினா்.

இதேபோல, வான்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 150 போ் நெல்லிக்குப்பம் அரசு மருத்துவமனை அருகே கடலூா்-பண்ருட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் பண்ருட்டி வட்டாட்சியா் ஆனந்த் மற்றும் போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தி கலைத்தனா்.

வெள்ள பாதிப்பு பகுதிகளில் என்எல்சி தலைவா் ஆய்வு

வெள்ளம் பாதித்த கடலூா் மாநகரப் பகுதிகளை என்எல்சி நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி புதன்கிழமை பாா்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினாா். ஃபென்ஜால் புயல், தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் கடலூா் மா... மேலும் பார்க்க

151 கிராமங்களில் தூய்மைப் பணி: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 151 கிராமங்களில் 2,045 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பா... மேலும் பார்க்க

பேரிடா் பாதிப்புகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும்: இயக்குநா் தங்கா் பச்சான்

தமிழகத்தில் ஏற்படும் இயற்கை பேரிடா் பாதிப்புகளுக்கு நிரந்தர தீா்வு காணப்பட வேண்டும் என்று திரைப்பட இயக்குநா் தங்கா் பச்சான் கூறினாா். கடலூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாமகவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

வீடுகளுக்குள் தேங்கிய சகதியை அகற்றும் பணி

கடலூரை அடுத்த குண்டு உப்பளவாடி பகுதியில் மழை வெள்ளத்தால் வீட்டினுள் தேங்கிய சேறும், சகதியை மாணவா் மற்றும் வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை அப்புறப்படுத்தினா். தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கா... மேலும் பார்க்க

அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்: பி.சண்முகம்

கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பி.சண்முகம் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாநகராட்சி வில்வராயநத்தம் பகுதியில் ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். புயல், மழையால் பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க