வேன் மோதி இளைஞா் மரணம்
கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே நடந்து சாலையைக் கடக்க முயன்ற இளைஞா் வேன் மோதி உயிரிழந்தாா்.
சேத்தியாதோப்பை அடுத்த நங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சத்திய பிரகாஷ் (25). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தாா்.
சத்திய பிரகாஷ் புதன்கிழமை இரவு 11 மணியளவில் விக்கிரவாண்டி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை நங்குடி அருகே சாலையை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் மோதியது. இந்த விபத்தில் அவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சோழத்தரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், பிரகாஷின் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.