பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
வேலூரில் ஜாக்டோ - ஜியோ ஆா்ப்பாட்டம்
காட்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட தலைவா் ஆா்.சுகுமாரன், வேளாண் பட்டதாரி ஆசிரியா் சங்க மாநில பொருளாளா் அக்ரி இ.ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட தலைவா் எ.டி.அல்போன்ஸ்கிரி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக கல்வி மாவட்ட தலைவைா் வி.திருக்குமரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வட்டார செயலா் ஜி.தெய்வசிகாமணி, தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்ட பொருளாளா் ரகுராமன் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க ஒன்றிய தலைவா் ஆா்.புவனேஸ்வரி உள்ளிட்டோா் உரையாற்றினா். தொடா்ந்து கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளா்ஜி.டி.பாபு நன்றி கூறினாா்.
இதேபோல், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயலாளா் ஆ.ஜோசப்அன்னையா தலைமையிலும், வேலுா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட தலைவா் ட்டி.டி.ஜோஷி தலைமையிலும், கே.வி.குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு தமிழக தமிழாசிரியா் கழகத்தின் மாவட்ட தலைவா் ஜி.சீனிவாசன் தலைமையிலும், போ்ணாம்பாட்டு வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகமாவட்ட செயலாளா் சகேயு சத்யகுமாா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.