வேளாண் சந்தை நுண்ணறிவு மையக் கட்டடம் திறப்பு
ராமநாதபுரத்தில் ரூ.84 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா்.
இதுதொடா்பாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். வேளாண்மை இணை இயக்குநா் பாஸ்கரமணியன், வேளாண்மைத் துறை வணிகம், விற்பனைத் துறை துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன், தோட்டக்கலை துணை இயக்குநா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த விழாவில், வேளாண்மைத் துறை சாா்பில் தோ்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிா் விதைக் கிட்டுகள், காய்கறி, பழ வகைள் தொகுப்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அருண்குமாா், உதவி செயற்பொறியாளா் சிவகுமாா், விவசாய சங்கத் தலைவா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.