வைத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்
வலங்கைமான் ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
ஜூன் 27-ஆம் தேதி கும்பாபிஷேக பணிகள் தொடங்கிய யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. புதன்கிழமை 4-ஆம் கால யாகபூஜைகள் நிறைவடைந்து புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோபுர கலசங்களில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாணம், இரவு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
