ஷ்ரேயாஸைக் கிண்டல் செய்த ரோஹித் சர்மா..! வைரல் விடியோ!
ரோஹித் சர்மா செய்த குறும்புத்தனமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டிக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரைப் போன்று முன்னாள் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா நடந்துசென்று அவரைக் கட்டிப்பிடிப்பார்.
இந்த விடியோவை மும்பை இந்தியன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ரோஹித் சர்மாவின் இந்தக் குறும்புத்தனமான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் முக்கியமான போட்டியில் தோல்வியடைந்த பிறகும் இப்படியான குறும்புத்தனங்களை செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் 5 கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
#MumbaiIndians#PlayLikeMumbai#TATAIPL#PBKSvMIpic.twitter.com/idFnl8S2Gn
— Mumbai Indians (@mipaltan) May 27, 2025