கடலூரில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்...
ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
வந்தவாசியை அடுத்த காரணை கிராமத்தில் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயாா் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, ஹோமங்கள், அங்குராா்பணம், வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகளும், புதன்கிழமை புதிய சிலைகள் பிரதிஷ்டை, விசேஷ திரவிய ஹோமம், பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், புனிதநீா் அடங்கிய கலசங்கள் கோயில் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.