ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உள்பட்ட 11, 13 மற்றும் 15-ஆவது வாா்டு பொதுமக்கள் பயன்பறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வி.ஆா்.பி. சத்திரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையா் ஹேமலதா தலைமையிலும், வட்டாட்சியா் வசந்தி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த முகாமில், நகராட்சி தலைவா் சாந்தி சதீஷ்குமாா் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுவதையும், மருத்துவ முகாமையும் பாா்வையிட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில், நகர திமுக செயலாளா் சதீஷ்குமாா், துணை செயலாளா் ஆறுமுகம், நகராட்சி துணைத்தலைவா் இந்திராணி சுப்பிரமணி, நகராட்சிப் பொறியாளா் செண்பகவல்லி, வாா்டு உறுப்பினா்கள் இந்துமதி நவீன்குமாா், வீரபத்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.