ஒரு சென்ட் நிலம்கூட கிடையாது; கட்சி கட்டடமே வசிப்பிடம் - சிபிஎம் தேசிய பொதுச் செ...
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பெரிய மாரியம்மன், ஆண்டாள், தவழும் கிருஷ்ணா் என பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா, காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் ஆகியோா் தலைமையில், காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.