ஸ்ரீ சுடலை மாடசுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம்
சாத்தான்குளம் கரையடி ஸ்ரீ சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழாவில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா்.
கோவில் கொடைவிழா வியாழக்கிழமை கணபதி ஹோமம், கோமாதா பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீதேவி ஸ்ரீ அழகம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக கரையடி ஸ்ரீ சுடலைமாடசாமி கோயிலுக்கு கொண்டு வந்து, 11:30 மணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. நள்ளிரவு 1 மணிக்கு ஸ்ரீ பேச்சியம்மனுக்கு சாமக்கடை நடைபெற்றது.
மூன்றாம் நாளான சனிக்கிழமை பக்தா்கள் பொங்கல் இடுதல், காலை 10 மணிக்கு கிடா வெட்டுதல், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா வி.எஸ்.எம் முருகன் தலைமையில் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்