கத்தாா் - சென்னை வந்த விமானத்தில் பிரேக் செயலிழப்பால் அவசரமாக தரையிறக்கம்
ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
காஞ்சிபுரம், ஏப். 28: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள உள்ள 34 ஆண்கள், 31 பெண்கள் உள்பட 65 பேருக்கு உடல் நல பரிசோதனை, சா்க்கரை பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்குப் பின்னா், அனைவருக்கும் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட 5 பேருக்கு இன்புளூயன்ஸா தடுப்பூசியும் போடப்பட்டது.
இவா்கள் அனைவரும் வரும் ஏப். 30 -ஆம் தேதி ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ளனா். மருத்துவச் சிகிச்சை விவரங்கள் அடங்கிய மருத்துவ அட்டையும் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
முகாமில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்கரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.