இருளிலும், இக்கட்டிலும் மாட்டியிருப்பது இபிஎஸ்தான்: அமைச்சா் துரைமுருகன்
ஹைதராபாத்: உள்ளாடையில் மறைந்து ஏலக்காய் பாக்கெட்டைத் திருடிய இளைஞர்; சிக்கியது எப்படி?
ஹைதராபாத் சனத்நகர் பகுதியில் செயல்பட்டு வரும் டி-மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் ஒரே நாளில் மீண்டும் கடைக்கு வந்து திருடியுள்ளார்.
டி-மார்ட் கடையில், ஓர் இளைஞர் ஏலக்காய் பாக்கெட்டுகளை திருட முயன்றுள்ளார். வழக்கம்போல் கடைக்குள் நுழைந்ததும் அந்த இளைஞர் ஒரு கூடை எடுத்துக் கொண்டு, பொருட்களை அதில் எடுத்து வைத்துள்ளார்.

இதில் ஏலக்காய் பாக்கெட்டுகளும் இருந்தன. பின்னர் லிப்டில் மேல்தளத்திற்குச் செல்லும் போது தனியாக இருந்த அந்த இளைஞர், கூடை வைத்திருந்த ஏலக்காய் பாக்கெட்டுகளை எடுத்து தன் உள்ளாடைகளில் மறைத்து வைக்க முயன்றார். ஆனால் லிப்டில் இருந்த சிசிடிவி கேமராவில் அவருடைய செயல்கள் முழுமையாகப் பதிவாகியிருந்தன.
கடை நிர்வாகம், ஏலக்காய் பாக்கெட்டுகளில் உள்ள எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதைக் கவனித்ததைத் தொடர்ந்து, சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தபோது அந்த இளைஞரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவர்கள் கவனித்தனர்.
சம்பவம் இதோடு முடியவில்லை. அதே இளைஞர் ஒரே நாளில் மீண்டும் கடைக்கு வந்து, இரண்டு ஏலக்காய் பாக்கெட்டுகளை எடுத்து வாஷ்ரூமில் சென்று அதேபோல் மறைக்க முயன்றிருக்கிறார்.
ஆனால் முன்னமே விழிப்புடன் இருந்த கடை ஊழியர்கள், அவர் வெளியே வந்தவுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.