செய்திகள் :

1,000 டாலர் தருகிறோம்; அமெரிக்காவிலிருந்து வெளியேறவும்! சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்

post image

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்களை நாடுகடத்தும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வரும் சூழலில், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு மக்களை அமெரிக்க அரசு கைது செய்து, அதன்பின் அவர்களை நாடு கடத்த அரசுக்கு ஆகும் செலவைவிட, மேற்கண்டவாறு புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிதியுதவி அளித்து அதன்மூலம் அவர்களாகவே தங்கள் சொந்த செலவில் அமெரிக்காவை விட்டு தங்களது தாயகம் திரும்புவது அமெரிக்க அரசுக்கு செலவினங்களைக் குறைக்கிறது. இதன் காரணமாகவே, இந்த நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை!

பஹல்காம் தாக்குதலையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இருப... மேலும் பார்க்க

ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது பிராந்திய பாதுகாப்பு குறித்து அவரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா். பஹல்காம் பயங்க... மேலும் பார்க்க

இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஜூலை 1-ஆம் தேதி ... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை அா்த்தமற்றது: ஹமாஸ்

காஸா மீது இஸ்ரேல் ‘பட்டினித் தாக்குதல்’ நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவது அா்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் முக்கிய ... மேலும் பார்க்க

பயங்கரவாத தொடா்பு; அணு ஆயுத மிரட்டல்: பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

‘பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடா்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா?’ உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழு... மேலும் பார்க்க