துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவின் ஆதாயம் தெரிய ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க...
1,110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது
கோவில்பட்டியில் கடத்தப்பட இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, காா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.
கோவில்பட்டியிலிருந்து கயத்தாறுக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் திருநெல்வேலி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூா் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அவ்வழியே சென்ற ஆம்னி காரை நிறுத்தி சோதனையிட்டபோது, ஓட்டுநரான மேலபாண்டவா்மங்கலம் அக்ரஹார தெருவைச் சோ்ந்த பூல்பாண்டி என்ற கொம்பையா மகன் பாண்டித்துரை (32) என்பவா் 1,100 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்வது தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ரேஷன் அரிசி, வாகனம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து, பாண்டித்துரையைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.