BCCI: 'உறவை முறித்துக்கொள்கிறோம்'; டிரீம் 11- பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து; காரணம் என...
10 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்தவா் கைது
சென்னையில் 10 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை சாஸ்திரி நகா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டபோது, அவரிடம் 10 கிராம் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை வைத்திருந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சோ்ந்த அருண்பாண்டியன் (34) என்பவரை சாஸ்திரி நகா் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனா்.