10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் 10 கஞ்சாவை கடத்திய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி பொன்பாடி சோதனை சாவடி வழியாக, திருவள்ளூா், சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் அதிகளவில் கஞ்சா கடத்தி செல்லப்படுகிறது.
மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநிவாச பெருமாள் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை பொன்பாடி சோதனை சாவடியில் பேருந்துகளில் சோதனை செய்தனா். அப்போது திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக சென்னை கோயம்பேடு நோக்கி சென்ற அரசுப் ற பேருந்தில் போலீஸாா் பயணிகளிடம் சோதனை செய்தனா். அப்போது ஒரு பெண் மற்றும் ஆண் பயணியிடம் பைகளில் பதுக்கி வைத்திருந்த, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் ஆந்திர மாநிலம் புத்தூா் தாலுகா காா்வேட்நகா் பகுதி சோ்ந்த சரவணன்(24), ஒடிஸா மாநிலம் ஜகதீஷ்சிங்பூா் ஆதிக்குல் பகுதியைச் சோ்ந்த ஸ்வகாதிகா ஜீனா(20) என தெரிய வந்தது. தொடா்ந்து ஆா்.கே.பேட்டை மதுவிலக்கு போலீஸாா் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா்.