அதிமுக எம்எல்ஏ அம்மன் அா்ச்சுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை
10 வட்டாட்சியா்கள் இடமாற்றம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 10 வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து ஆட்சியா் ச.உமா உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
அதன் விவரம்: நாமக்கல் நெடுஞ்சாலை அலகு-2 தனி வட்டாட்சியா் ப.தமிழரசி திருச்செங்கோடு கோட்டாட்சியா் நோ்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய பி.காா்த்திகேயன் மோகனூா் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். அங்கு பணியாற்றி வந்த சூ.சசிகுமாா் ராசிபுரம் வட்டாட்சியராகவும், திருச்செங்கோடு வட்டாட்சியா் ச.விஜயகாந்த் நாமக்கல் நெடுஞ்சாலைகள் அலகு-2 தனி வட்டாட்சியராகவும் (நில எடுப்பு), நாமக்கல் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் து.கிருஷ்ணவேணி, திருச்செங்கோடு வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், ராசிபுரம் வட்டாட்சியா் சு.சரவணன், கொல்லிமலை நிலவரி திட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றி வந்த த.மோகன்ராஜ், நாமக்கல் வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றி வந்த ரா. சீனிவாசன், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம், அலுவலக மேலாளா் (நீதியியல்), அங்கு பணியாற்றி வந்த ம.தங்கம், நாமக்கல் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், மோகனூா் வட்டாட்சியா் மணிகண்டன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய்த் துறை பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்த பணியிட மாறுதல் தொடா்பாக முறையீடு விண்ணப்பங்களோ, விடுப்பு விண்ணப்பங்களோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.