தொழிலாளா் தினம்: விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
100-ஆவது போட்டியில் விளையாடிய 17 வயது சிறுவன்..! அடுத்த மெஸ்ஸியா?
பார்சிலோனா அணியில் விளையாடும் 17 வயதான லாமின் யமால் தனது 100-ஆவது போட்டியில் விளையாடியுள்ளார்.
ஸ்பானிஷைச் சேர்ந்த லாமின் யமால் 2023 முதல் பார்சிலோனா அணியில் விளையாடி வருகிறார்.
நேற்றிரவு சாம்பியன்ஸ் லீக் முதல்கட்ட அரையிறுதியில் தனது 100-ஆவது போட்டியில் களமிறங்கினார். இதில் அசத்தலான ஒரு கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.
லியோனல் மெஸ்ஸி 100-ஆவது போட்டியை தனது 20-ஆவது வயதில் நிறைவு செய்திருந்தார்.
100 போட்டிகளில் மெஸ்ஸி 34 கோல்கள், 20 அசிஸ்ட்ஸ் செய்ய, லாமின் யமால் 100 போட்டிகளில் 33 அசிஸ்ட்ஸ், 22 கோல்கள் அடித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் கடந்த இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மெஸ்ஸி என்ன செய்வாரோ அதையே லாமின் யமாலும் செய்தார்.
எதிரணி டிஃபெண்டர்களை ஏமாற்றி பந்தினை லாவகமாக எடுத்துச் செல்வதும் பின்னர் தனது இடது காலினால் கோல் அடிப்பதும் என அப்படியே மெஸ்ஸி மாதிரியே செய்தார்.
இன்டர் மிலனின் பலமான டிஃபென்ஸை தாண்டிச்சென்று கோல் அடித்ததுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
போட்டி முடிந்த பிறகு லாமின் யமாலுக்கு 100-ஆவது போட்டிக்கான சீருடை வழங்கப்பட்டது. பலரும் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் போட்டியில் வர்ணனையாளர்கள் லாமின் யமாலை மெஸ்ஸியைப் பார்ப்பது போல இருந்ததாகக் கூறினார்கள்.
Lamine Yamal pic.twitter.com/QmIjoNHSwo
— FC Barcelona (@FCBarcelona) April 30, 2025