100 நாள் வேலைக்கான நிலுவை கூலி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
100 நாள் வேலை தொழிலாளா்களுக்கு கூலி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் ஜி. நாகராஜன் தலைமை வைத்தாா். ஒன்றியத் தலைவா் எஸ். ராசு, மாவட்ட குழு உறுப்பினா் எம். இளவரசி, ஒன்றியச் செயலா் டி. சாமிக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலக் குழு உறுப்பினா் உ. அரசப்பன் சிறப்புரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். கலியபெருமாள், டி. அம்பலராசு, கே. விமலா, கே. பெருமாள், எஸ். நடராஜன், வீராசாமி, மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் மற்றும் அலுவலா்கள் பேச்சு நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.