புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டம்: 15 நாள்களில் திறக்க ஏற்பாடு தீவிரம்
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! 92.09% தேர்ச்சி!
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. ஒட்டுமொத்தமாக 92.09% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் https://tnresults.nic.in/ ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவா்களுக்கு கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.