12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடங்கி வைப்பு
மாநில அளவில் முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் முகாமை திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் முன்னிலை வகித்தார். மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது. தற்போதைய நிலையில் பொதுமக்கிளிடையே புற்றுநோய் அதிகரித்து வருகிறது. மாநில அளவில் ஏற்கெனவே ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 20 லட்சம் பேருக்கு புற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 15.48 லட்சம் பேர் பரிசோதனை செய்தனர். அதில் 359 பேருக்கு புற்று நோய் உள்ளது கண்டறியப்பட்டது.
தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். எனவே ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் எளிதில் தீர்க்க முடியும். இதைத்தொடர்ந்து மாநில அளவில் மேற்கொள்ள ரூ.27 கோடியில் ஒதுக்கீடு செய்து 12 மாவட்டங்களில் வாய்ப் புற்றுநோய், கர்ப்ப வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய்களை கண்டறியும் திட்டம் திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சித்திரைத் திருவிழாவில் பலியானோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
எனவே ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வொரு குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும். புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், இந்த நேரத்தில் சமுதாய அளவிலான குடியிருப்புக்கு அருகே புற்றுநோய் கண்டறியப்பட உள்ளன. 14 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன.
மாநில அளவில் அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். மருத்துவ முதன்மை செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை இயக்குநர் செல்வவகநாயகம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வக.ஜி.ரிஜேந்திரன்(திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி), எஸ்.சந்திரன்(திருத்தணி),மாவட்ட சுகாதார அலுவலர் பிரியா ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.