செய்திகள் :

15 வயதில் காதல் திருமணம்; உறவில் விரிசல்; கணவனை கொலை செய்து சாக்கடையில் வீசிய மனைவி

post image

டெல்லியில் உள்ள அலிபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சோனியா (34). இவரது கணவர் பிரித்தம். இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் டெல்லியில் பதிவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி ஹரியானாவில் உள்ள சோனிபட் என்ற இடத்தில் இருக்கும் தன் சகோதரி வீட்டிற்கு சோனியா சென்றிருந்தார். அவரை அழைத்து வர பிரித்தம் சென்றார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து பிரித்தம் காணாமல் போய்விட்டார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அதே ஆண்டு ஜூலை 20ம் தேதி சோனியா தனது கணவரை காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

போலீஸாரின் விசாரணையில் கடந்த ஒரு ஆண்டில் பிரித்தம் எந்த வித பண பரிவத்தனையிலும் ஈடுபடவில்லை. அதோடு பிரித்தம் எங்கேயும் தென்படவில்லை. ஆனால் திடீரென பிரித்தம் பெயரில் எடுக்கப்பட்ட சிம் கார்டு ஒன்று ஆக்டிவிற்கு வந்தது. அந்த போன் நம்பரை போலீஸார் கண்காணிக்க ஆரம்பித்தனர். அந்த போன் சோனிபட் பகுதியில் பயன்பாட்டில் இருந்தது. அதனை பயன்படுத்திய ரோஹித் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் ரோஹித்திற்கும் சோனியாவிற்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்துள்ளது. அவர் பிரித்தத்தை கொலை செய்த விபரத்தை தெரிவித்தார்.

அவரிடம் விசாரித்தபோது சோனியா தன் சகோதரியின் கணவர் விஜய்க்கு பணம் கொடுத்து பிரித்தத்தை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து சோனியாவைப் பிடித்து விசாரித்த போது, கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி பிரித்தம் தன் மனைவியிடம் வந்து தகராறு செய்துவிட்டு சென்றுள்ளார். உடனே சோனியா தன் சகோதரியின் கணவர் விஜயிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து தன் கணவனைக் கொலை செய்துவிடும்படி கூறி இருக்கிறார். தகராறு செய்து விட்டு வெளியில் சென்ற பிரித்தம் மீண்டும் வீட்டிற்கு வந்து தன்னை வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சோனியாவிடம் கேட்டுக்கொண்டார்.

சோனியாவும் சம்மதித்துள்ளார். பிரித்தம் வீட்டின் மாடியில் படுத்து உறங்கி இருக்கிறார். அவ்வாறு உறங்கியபோது விஜய் அவரைக் கொலை செய்துள்ளார். உடலை அருகில் உள்ள சாக்கடைக்கு எடுத்துச் சென்று விஜய் வீசியிருக்கிறார். அதோடு பிரித்தம் உடலை போட்டோ எடுத்து அதனை சோனியாவிற்கு விஜய் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி இருந்தார். பிரித்தம் ஓட்டி வந்த ஆட்டோவை சோனியா ரூ.4.5 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். பிரித்தம் பயன்படுத்திய சிம்கார்டை தனது காதலன் ரோஹித்திடம் கொடுத்துள்ளார்.

ஹரியானா சோனிபட் பகுதியில் போலீஸார் அடையாளம் தெரியாத உடல் ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த உடல் டி.என்.ஏ.மாதிரியை எடுத்து வைத்திருந்தனர். தற்போது பிரித்தம் கொலை வழக்கில் துப்பு துலங்கி இருப்பதால் பிரித்தம் குழந்தைகளின் டி.என்.ஏ. மாதிரியுடன் ஒப்பிட்டுப் பார்க்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். சோனியா தனது 15வது வயதில் பிரித்தத்தை காதலித்து கரம்பிடித்தார். அவர்களது திருமணத்திற்கு சோனியாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

நாளடைவில் அவர்களது திருமணத்தை சோனியாவின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் 16 வயது மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். விஜய் மீது 4 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. விஜய் இப்போது தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பள்ளி முதல்வரை பணி நீக்கம் செய்ய தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த மாணவன்; 3 பேர் கைது - என்ன நடந்தது?

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் இருக்கும் ஹுலிகட்டி என்ற இடத்தில் இருக்கும் அரசு பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக முதல்வராக இருந்தவர் சுலைமான் கோரிநாயக். இப்பள்ளியில் இருந்த தண்ணீர் தொட்டிய... மேலும் பார்க்க

நாமக்கல்: கடன் தொல்லை - ராசிபுரத்தில் 3 பெண் குழந்தைகளை கொலை செய்து தந்தை விஷம் அருந்தி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(35). இவரது மனைவி பாரதி(26). இந்த தம்பதியினர்களுக்கு 10 பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 4 குழந்தைகள் ... மேலும் பார்க்க

மதம் மாறி திருமணம் செய்ய மறுப்பு; வீடு புகுந்து பெண் கழுத்தை அறுத்து கொலை - ம.பி-யில் அதிர்ச்சி!

மத்திய பிரதேச மாநிலம், நவாரா என்ற இடத்தில் வசித்தவர் பாக்யஸ்ரீ(35). இவரிடம் அதே ஊரை சேர்ந்த ஷேக் ரியாஸ்(42) என்பவர் தன்னை திருமணம் செய்யும்படி நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்தார். அவரை அடிக்கடி பின் த... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: மாயமான மாணவன் பள்ளி கிணற்றில் சடலமாக மீட்பு; இறுதிச் சடங்கில் போலீஸார் குவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகிலுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் அப்புக்குட்டி என்கிற முகிலன் (வயது 16). திருப்பத்தூரில், அரசு நிதியுதவியுடன் செயல்படக்கூடிய `த... மேலும் பார்க்க

`குடிப்பழத்தால் என் மகன், நான் இறந்துவிட்டதாக கூறி சொத்தை விற்றுவிட்டான்' -90 வயது முதியவர் கண்ணீர்

பீகாரில் ஒருவர் தனது தந்தை உயிருடன் இருக்கும் போதே, அவர் இறந்து விட்டதாக கூறி குடும்ப சொத்தை மகன் விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முஜாபர்பூர் அருகில் இ... மேலும் பார்க்க

அழுது வீடியோ வெளியிட்ட CRPF பெண் காவலர்; "தாமதமாக FIR போட்டதாகச் சொல்வது பொய்" - நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள பொன்னை நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரின் மகள் கலாவதி (வயது 32), ஜம்மு - காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் காவலராக தேசப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வர... மேலும் பார்க்க