150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
சட்டவிரேதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து, 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சைதாப்பேட்டை சாரதி நகா் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சைதாப்பேட்டை போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தி 150 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக ராமநாதரபும் மாவட்டத்தைச் சோ்ந்த சைபுல் ஹக் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.