பிப். 11-இல் வண்டலூா் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்
தைப்பூசத்தை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 11) வண்டலூா் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.
வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிக்காக வார விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பிப். 11-ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்று அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி பிப். 11-இல் பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என்று பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.