கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மது விற்கக் கூடாது: புதுவை கலால் துறை உத்தரவு
18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று புதுவை கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து சாராயக் கடைகள், கள்ளுக் கடைகள், இந்தியாவில் தயாராகும் அயல் நாட்டு மதுபானக் கடைகள், மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் உணவு விடுதிகளுக்கு கலால் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
பல்வேறு வகையிலும் 18 வயதுக்குள்பட்டவா்களை மதுபான பாா்களில் பெற்றோா்கள், உறவினா்களுடன் உள்ளே அனுமதித்து மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் வந்துள்ளன.
1970-ஆம் ஆண்டு 196 (இ) புதுவை கலால் விதி 18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மது விற்பனை செய்யவோ, கொடுக்கவோ கூடாது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த விதியின் படி 18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மது விற்பனை செய்வது தண்டிக்கப்பட கூடிய குற்றம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதை மீறுவோா் மீது இந்த விதியின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.