அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
2-ஆவது நாளாக கல்லூரிப் பேராசிரியா்கள் போராட்டம்
கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியா்கள் 2-ஆவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கொடைக்கானல் அருகேயுள்ள அட்டுவம்பட்டியில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 15-ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பேராசிரியா்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யூ.சி.ஜி.உத்தரவின்படி, சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.