செய்திகள் :

2-வது டெஸ்ட்: உணவு இடைவேளையின்போது தென்னாப்பிரிக்கா 113 ரன்கள் குவிப்பு!

post image

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 6) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

உணவு இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டோனி டி ஸார்ஸி 10 ரன்களிலும், லெஸிகோ 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின் ஜோடி சேர்ந்த கேப்டன் வியான் முல்டர் மற்றும் டேவிட் பெடிங்ஹம் சிறப்பாக விளையாடி வருகின்றனர். கேப்டன் வியான் முல்டர் 68 பந்துகளில் 60 ரன்களுடனும் (8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), டேவிட் பெடிங்ஹம் 34 பந்துகளில் 40 ரன்களுடனும் (5 பவுண்டரிகள்) களத்தில் உள்ளனர்.

ஜிம்பாப்வே தரப்பில் தனாகா சிவங்கா மற்றும் வெலிங்டன் மசகட்ஸா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

South Africa scored 113 runs for the loss of 2 wickets in the first innings of the second Test match against Zimbabwe.

இதையும் படிக்க: பர்மிங்ஹாமில் மழை..! இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெறுமா?

டிஎன்பிஎல்: முதல்முறையாக மகுடம் சூடிய திருப்பூர் தமிழன்ஸ்!

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்(டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி மகுடம் சூடியது.திண்டுக்கல்லில் இன்று(ஜூலை 6) மாலை தொடங்கிய டி.என்.பி.எல். இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் சாம்பியன் யார்? திண்டுக்கல் டிராகன்ஸுக்கு 221 ரன்கள் இலக்கு!

திண்டுக்கல்: தமிழ்நாடு ப்ரீமியர் லீக்(டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மகுடம் சூட திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இன்று(ஜூலை ... மேலும் பார்க்க

ஷுப்மன் கில் விராட் கோலியின் நகல்: முன்னாள் இங்கிலாந்து வீரர்

ஷுப்மன் கில் விராட் கோலியின் நகல் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப... மேலும் பார்க்க

6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து; வெற்றியை நோக்கி முன்னேறும் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இர... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி: திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சு!

டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.கடந்த மாதம் தொடங்கிய டிஎன்பில் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்... மேலும் பார்க்க