Thug Life: "நாங்களே Gen Z தான்!" - மணிரத்னம் கொடுத்த தக் பதில்
2,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் தெருவில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரபுரம் தெருவில் மதியழகன் என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் இணைந்து மதியழகன் வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 51 சிப்பங்களில் இருந்த மொத்தம் 2,400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
இந்த ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மதியழகன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனா்.