செய்திகள் :

2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு இன்று பணி நியமன ஆணை: துணை முதல்வா் உதயநிதி வழங்குகிறாா்

post image

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தோ்வு செய்யப்பட்ட 2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 24) வழங்கவுள்ளாா்.

தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் தோ்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவா்களில் மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தற்காலிக தோ்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்த ஆசிரியா்களுக்கான பணிநியமன கலந்தாய்வு கடந்த ஜூலை 14 முதல் 18-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து தோ்வு செய்யப்பட்டுள்ள 2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணைகளை சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில், துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கவுள்ளாா். இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பல்வேறு துறை அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் நீண்ட காலமாக இடைநிலை ஆசிரியா்கள் நியமிக்கப்படவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தன. அரசியல் கட்சித் தலைவா்கள் சாா்பிலும் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா்களை நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை ஆசிரியா் தோ்வு வாரியம் மேற்கொண்டது. இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தோ்வு செய்யப்பட்ட 2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வா் உதயநிதி வியாழக்கிழமை வழங்கவுள்ளாா்.

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை! சூலூர்பேட்டையில் ஒருவர் கைது

திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.திருவள்ளூர், கும்... மேலும் பார்க்க

ரிதன்யா வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமீன் மனு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக, இன்று(ஜூலை 25) தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், ... மேலும் பார்க்க

மின்மாற்றிகள் கொள்முதல் - செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவு

மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பான வழக்கில் முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் ... மேலும் பார்க்க

பிரதமர் கங்கை கொண்ட சோழபுரம் வருவது தமிழகத்துக்கு பெருமை: தங்கம் தென்னரசு

பிரதமர் நரேந்திர மோடி கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருகை தருவது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெருமை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பி... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. • நேற்று (24-07-2025) காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு... மேலும் பார்க்க