மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
2025ல் விற்பனைக்கு வரும் புதிய ஸ்மார்ட்ஃபோன்கள் !
ஹைதராபாத்: ஸ்மார்ட்ஃபோன்கள் சக்திவாய்ந்த டிஜிட்டல் நுழைவாயில்களாக தற்போது உருவாகியுள்ளன. இந்த நிலையில், தொழில்நுட்ப உலகில் மிகவும் பரபரப்பான வெளியீடுகளில் இந்த ஆண்டும் ஒன்றாக தெரிகிறது. இது இளைய தலைமுறையினரிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐபோன் 17
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 17 அனைத்து மாடல்களிலும் 120 ஹெர்ட்ஸ் புரோ-மோஷன் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகிறது. இது ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் ஆகிய செயல்பாடுகளுக்கு அற்புதமான காட்சி அனுபவத்தை வழங்கும்.
புதிய ஐபோன் 17 ஏர் ஆனது சிலிம்மாகவும் அதன் செயல்திறனில் எவ்வித சமரசம் இல்லாமல், மலிவு விலையில் விரைவில் வர உள்ளது. இது பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும் அதே நேரத்தில் அதிக செயல்திறன் கொண்ட கைபேசி ஆகவும், பயனர்களுக்கு கவர்ச்சிகரமான தேர்வாக அமையும் என்ற கருத்துக்கு மறுப்பு இல்லை.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா
சாம்சங் கேலக்ஸி எஸ் 25 மிகவும் அதிநவீன வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட கேமரா திறன்களைக் கொண்டிருக்கும். இந்த போன் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புகைப்பட திறன்களை வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பயனர்களுக்கு தடையற்ற உயர் செயல்திறன் அனுபவத்தை வழங்கும் வேளையில், இதில் உள்ள சிப்செட்கள் மற்றும் காட்சி தொழில்நுட்பத்தில் புதுமை மேம்படுத்தும் விதமாக அமையும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவில் முக்கியமாக மேம்பட்ட கேமரா உடன் புதுமையான டிஸ்ப்ளே மற்றும் சக்தி வாய்ந்த செயல்திறன் கொண்ட ஒரு பவர்ஹவுஸாக இருக்கும். இது கேமிங் மற்றும் மல்டிமீடியாவுக்கு ஏற்றது.
ஒன்பிளஸ் 13 சீரிஸ்
ஒன் பிளஸ் 13 சீரிஸில் சக்திவாய்ந்த மென்பொருள் மேம்பாடு, அதிவிரைவான சார்ஜிங், வடிவமைப்பு, அதிநவீன கேமரா மற்றும் கேமிங் மேம்பாடுகள் ஆகியவை இதில் இடம்பெறும்.
ஒன்பிளஸ் ஜனவரி 7 ஆம் தேதி அதன் முதன்மையான ஒன்பிளஸ் பட்ஸ் புரோ 3 உடன் மற்ற தொலைபேசிகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் 9ஏ மற்றும் பிக்சல் 10
கூகுள் தனது பட்ஜெட் தொலைபேசியான பிக்சல் 9ஏ மார்ச் 2025ல் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிறிய ஸ்பெக் மேம்படுத்தல்களுடன், விலை பட்டியலை தக்க வைத்துக் கொள்ளும். முக்கியமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா இதன் தோற்றத்தை ஈர்க்கும் வெகுவாக ஈர்க்கும்.
கூடுதலாக, கூகிள் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிக்சல் 10 தொடரை அறிமுகப்படுத்தக்கூடும். இதில் பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் மடிக்கக்கூடிய பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஆகிய கைபேசி இதில் அடங்கும்.
சியோமி எம்ஐ 14
சியோமி எம்ஐ 14 உயர்மட்ட காட்சி தொழில்நுட்பம், சக்திவாய்ந்த செயலிகள் மற்றும் சிறந்த செயல்திறனை மிகவும் மலிவு விலையில் வழங்கும். பிரீமியம் செலவு இல்லாமல் முதன்மை அம்சங்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
ரெட்மி 14-சி ஆனது சீனாவிலிருந்து மறுபெயரிடப்பட்ட ரெட்மி 14-ஆர் ஆக இருக்கலாம். இது ஸ்னாப்டிராகன் - 4 இரண்டாம் தலைமுறை சிப் மூலம் இயக்கப்படும்.
இதில் 6.88-இன்ச் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5160 எம்எஎச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.