2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!
2025 ஆம் ஆண்டில் இதுவரை நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர் பி.எல். வர்மா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில்,
நாடு முழுவதும் ஜூலை 22 வரை 76,318 நுகர்வோர் புகார்கள் பதிவாகியுள்ளன. இதில், கடந்த ஆண்டுகள் பதிவான வழக்குகள் உள்பட 64,297 புகார்களுக்கு நுகர்வோர் நீதிமன்றங்களில் இந்த ஆண்டு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் மட்டும் ஜூலை 22 வரையிலான காலகட்டத்தில் புதிதாக 12,021 நுகர்வோர் வழக்குகள் பதிவாகியுள்ளன.
2024-ல் மட்டும் 1,73,160 நுகர்வோர் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதில், அதற்கு முந்தைய ஆண்டு பதிவான வழக்குகள் உள்பட 1,58,290 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் கூறினார்.
இதேபோன்று, 2022 ஆண்டில் 1,75,676 நுகர்வோர் வழக்குகளும், 2023ஆம் ஆண்டு 1,74,278 வழக்குகள் பதிவானதாகவும் குறிப்பிட்டார். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தீர்வு காணப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை முறையே 1,82,870 மற்றும் 1,85,777 எனத் தெரிவித்தார்.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 79 மாவட்ட நுகர்வோர் மன்றங்கள் செயல்படுவதாகவும், இதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தில் 48 நுகர்வோர் மன்றங்கள் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பிரபல நடிகைக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்: கன்னட நடிகரின் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்!