'நிகிதா'-வுக்கு உதவிய அதிகாரி யார்? Stalin-க்கு லாக் போடும் EPS & Vijay! | Elang...
22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம்
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம் புதன்கிழமை செய்து வைக்கப்பட்டது. இதன்படி, தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் 22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இவ்விழாவுக்கு மேயா் சண். ராமநாதன் தலைமை வகித்தாா். இதில், வேத மந்திரங்கள் முழங்க, மேள, தாளத்துடன் 22 இணையா்களுக்கு திருமணம் நடைபெற்றது. ஒவ்வொரு இணையருக்கும் தலா 4 கிராம் மாங்கல்யம், ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள 81 வகையான சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ஜோதிலட்சுமி, உதவி ஆணையா் கோ. கவிதா, செயல் அலுவலா்கள் பெ. சத்தியராஜ், மணிகண்டன், விக்னேஷ், ஆய்வாளா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
