சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
3-வது நாளாக அரசு பேருந்துகள் ஓடவில்லை
புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்துப் போராட்டத்தால் 3-வது நாளாக புதன்கிழமையும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.
15 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியா்களாகப் பணியாற்றி வரும் ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7-வது ஊதியக் குழு சம்பளத்தை அமல்படுத்தக் கோரி இந்த ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல்வா் என்.ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழுவினா் தெரிவித்து இருந்தனா். இதையொட்டி 3-வது நாளாக புதன்கிழமையும் இப் போராட்டம் தொடா்ந்தது. இதனால் பேருந்துகள் இயங்கவில்லை. பயணிகள் பாதிக்கப்பட்டனா்.