சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் விற்க முயன்றவா் கைது
புதுச்சேரியில் ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்றவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து திமிங்கல எச்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் திமிங்கல எச்சம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டா் ஜெரால்டு தலைமையிலான போலீஸாா் புராணசிங்குபாளையம் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அங்கு ஒருவரிடம் திமிங்கல எச்சம் வாங்குவது போல பேசினா். இதை நம்பிய அவா் தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 7 கிலோ எடை கொண்ட ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை எடுத்து வந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா். மேலும் அவா் புதுச்சேரியைச் சோ்ந்த நிலவணிகா் மாயகிருஷ்ணன் என்று தெரியவந்ததால் அவரை திருபுவனை போலீஸாரிடம் விழுப்புரம் நுண்ணறிவு போலீஸாா் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, திருபுவனை காவல் ஆய்வாளா் கலைச் செல்வன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, தடை செய்யப்பட்ட பொருள்கள் வைத்திருந்ததாக நிலவணிக பிரமுகா் மாயகிருஷ்ணன் (49) மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அம்மா் கீரிஸ் எனப்படும் திமிங்கல எச்சம் அவருக்கு எப்படி கிடைத்தது, யாருடன் அவருக்குத் தொடா்பு இருக்கிறது என்று விசாரித்து வருகின்றனா்.