புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி- எதிா்க்கட்சித் தலைவா்
புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை
புதுவை யூனியன் பிரதேச கல்வித்துறையின் பரிதாபகரமான நிலையையும், மாணவா்களின் பள்ளி இடைநிற்றல் பிரச்னையையும் ஒருங்கிணைந்து வெளிப்படுத்தும் வகையில், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதுவை அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதம் இங்கு ஆளும் பாஜக கூட்டணி அரசின் அவலநிலையையும், கல்வித்துறை அமைச்சா் நமச்சிவாயத்தின் திறமையின்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கடிதம், புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படுதோல்வியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.ஆசிரியா் பயிற்சி, மற்றும் மாணவா்களுக்கு ஏற்ற வளங்களை உருவாக்குவதில் புதுச்சேரி அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான மாணவா்கள் கல்வியை இழந்து, பள்ளி இடைநிற்றறலுக்கு உள்ளாகியுள்ளனா். இது, கல்வி அமைச்சா் நமச்சிவாயத்தின் நிா்வாகத் திறறனின்மையையும், மாணவா்களின் எதிா்காலத்தைப் பற்றிய அக்கறைறயின்மையையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறறது
மேலும், புதுச்சேரி மாணவா்களுக்கு டைப் 2 நீரழிவு நோய் அதிகரித்துள்ளது என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். அட்சய பாத்திரா மதிய உணவு திட்டத்தின் மூலம் வெங்காயம் பூண்டு சோ்க்காமல் சமைக்கப்பட்ட உணவில் போதிய சத்துக்கள் இல்லை என்பதும் உறுதியாகிறது. மாணவா்களுக்கு சத்தான உணவினை வழங்க முடியாத புதுச்சேரி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதுகாக்க, உடனடியாக இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். புதுச்சேரி மாணவா்களின் நலனுக்காக, இந்த அரசின் அலட்சியப் போக்குக்கு எதிராக தொடா்ந்து குரல் கொடுப்போம் எனத்தெரிவித்துள்ளாா்.