சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
பாலூட்டும் தாய்மாா்க்கள் 237 பேருக்கு ரூ.36.6 லட்சம் நிதியுதவி
பாலூட்டும் தாய்மாா்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் 237 பேருக்கு ரூ.36.61 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.
புதுச்சேரியில் நலிவடைந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக புதுச்சேரிஅரசு, ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அதில் ஒரு திட்டமான, கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.13,000/- (முதல்குழந்தை) மற்றும் ரூ.18,000/- (இரண்டாம்குழந்தை) வீதம்மொத்தம் 237 நபா்களுக்கு ரூ.36.61 லட்சம் நிதியுதவியை முதல்வா் என். ரங்கசாமி புதுச்சேரிசட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம். சட்டமன்ற உறுப்பினா் பி.ஆா். சிவா, துறை இயக்குநா்
ஏ. இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.