சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை
4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அதன்படி குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும் கேரளம், மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா 1 தொகுதிக்கும் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.
குஜராத் கடி தொகுதி, மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் மற்றும் பஞ்சாப்பின் லூதியானா ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்கள் இறந்ததாலும் குஜராத்தின் விசாவதாா் மற்றும் கேரளத்தின் நீலம்பூா் தொகுதிகளின் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தைத் தொடா்ந்தும் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.
இந்த தொகுதிகளில் ஜூன் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.