‘ஆபா’ மருத்துவத் திட்ட அடையாள அட்டை: விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுமா?
4-வது காலாண்டு வருவாய்க்குப் பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் 5% சரிவு!
புதுதில்லி: என்.பி.எப்.சி. நிறுவனமான, பஜாஜ் பைனான்ஸ், மார்ச் 2025 காலாண்டில், அதன் நிகர லாபம், 16 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்தையில் 4.99% சரிந்து ரூ.8,635.70 ஆக முடிவடைந்தது. இது பகலில் 5.82 சதவிகிதம் சரிந்து ரூ.8,560 ரூபாயாக இருந்தது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையில் 5.27 சதவிகிதம் சரிந்து ரூ.8,613.50 ஆக முடிந்தது.
இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.28,186.83 கோடி ரூபாய் குறைந்து ரூ.5,36,648.31 கோடி ரூபாயாக உள்ளது.
மார்ச் 31, 2025 வரையான காலாண்டில், பஜாஜ் பைனான்ஸ் நிகர லாபம் 16 சதவிகிதம் அதிகரித்து ரூ.3,940 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு அதே காலாண்டில் நிறுவனமானது ரூ.3,402 கோடி நிகர லாபம் பதிவு செய்தது.
2024-25ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.12,764 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.15,808 கோடியானது. நிறுவனத்தின் வட்டி வருமானம் ரூ.11,201 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.13,824 கோடியானது.
ஒருங்கிணைந்த அடிப்படையில், நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.3,825 கோடியிலிருந்து 19 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,546 கோடியானது.
இதையும் படிக்க: அட்சய திருதியை: தங்கம் விற்பனை அமோகம்!