4 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தில் நான்கு ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருது பெற்றனா்.
கீழ்பென்னாத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ந.சுமித்ராதேவி, வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் வெங்கடேசன், தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் சந்திரசேகரன், ஆவூா் தூய நெஞ்சக மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சரோஜினி ஆகியோா் தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அவா்களுக்கு நல்லாசிரியா் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.