4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
மதுரை மாநகரக் காவல் துறையில் பணிபுரிந்த 4 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டாா்.
மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட மதிச்சியம் காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்த வேதவல்லி, மதுரை நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், மதுரை நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய விமலா, அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதேபோல, விருதுநகரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த செல்வி, மதுரை கூடல்புதூா் குற்றத் தடுப்புப் பிரிவுக்கும், கூடல்புதூா் சட்டம்- ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய ஆய்வாளா் பாலமுருகன், மதிச்சியம் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பிறப்பித்தாா்.