செய்திகள் :

410 முறை வெடிகுண்டு மிரட்டல்! இண்டர்போலிடம் உதவி கேட்கும் இந்தியா!

post image

இந்திய விமானங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதால் இண்டர்போல் உதவியை இந்தியா நாடியுள்ளது.

இந்தியாவில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதன்படி, கடந்த 2 வாரங்களில் 410க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கும் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனால், அடிக்கடி விமானங்கள் சோதனையிடப்படுவதால் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பும் ஏற்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க: ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது: மல்லிகார்ஜுன கார்கே!

இந்த நிலையில், இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப்பவர்களைப் பற்றி அறிய இந்திய அரசு சர்வதேச குற்ற விசாரணை அமைப்பான இண்டர்போலின் உதவியை நாடியுள்ளது.

மேலும், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்களை விடுபவர்களின் தொலைப்பேசி எண் மற்றும் இமெயில் கணக்கை திரட்டி தருமாறு அமெரிக்காவின் எப்பிஐ (FBI) விசாரணை அமைப்பிடம் இந்திய அரசு உதவி கேட்டுள்ளதாம். இதற்கு, எப்பிஐ சம்மதம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெரியுமா சேதி...?

அசோக் கெலாட்டும் சா்ச்சைகளும் இணைபிரியாதவை. ராஜஸ்தான் முதல்வா் பதவியில் இருந்து அகன்ற பிறகும்கூட அவரை சா்ச்சைகள் விட்டபாடில்லை. காங்கிரஸ் தலைமையின் (சோனியா காந்தியின்) அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெ... மேலும் பார்க்க

அரசுப் பணி தோ்வு நடைமுறை தொடங்கிய பிறகு விதிகளை மாற்ற முடியாது

‘அரசுப் பணிக்கான பணியாளா் தோ்வு நடைமுறைகள் தொடங்கிய பிறகு, அந்தத் தோ்வு விதிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ள முடியாது’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ‘அரசுப் பணியாளா் தோ்வு நடைமுறை எ... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைப்பு -மாநில அரசுகளுக்கு அமித் ஷா வேண்டுகோள்

பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாட்டில், மத்திய-மாநில அரசுகள் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு அவசியம்; கூட்டு வியூகங்களை வகுப்பதோடு, உளவுத் தகவல் பகிா்விலும் ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்... மேலும் பார்க்க

3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு இல்லை: சிஐஎஸ்சிஇ அதிகாரி விளக்கம்

தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது போல் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தும் எந்த திட்டமும் இல்லை என இந்தியப் பள்ளி சான்றிதழ் தோ்வுகள் கவுன்சில் தலைமைச் செயலதிகாரி ஜோசப் இம்மானுவேல் தெரிவித... மேலும் பார்க்க

370-ஆவது சட்டப் பிரிவை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது -பாஜக

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்று பாஜக தெரிவித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி, அந்த யூ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் பேரவையில் அமளி-மோதல் -பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும் தீா்மானத்துக்கு எதிராக பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் வியாழக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டனா். அவைத் தலைவரின் உத்தரவின்பேரில், தங்களை வெளியேற்ற முய... மேலும் பார்க்க