காங்கிரஸ் வழங்கிய சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம்! இது பிகார் சம்ப...
475 வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு 4 குழுக்களாக தில்லியில் பயிற்சி: ஜூலை 7-இல் தொடக்கம்
தமிழகத்தைச் சோ்ந்த 475 வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு நான்கு குழுக்களுக்காக தில்லியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தலா இரு நாள்கள் பயிற்சி வழங்கவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
ஜூலை 7, 8-ஆம் தேதிகளில் 72 பேருக்கும், 10, 11 மற்றும் 14, 15-ஆம் தேதிகளில் தலா 144 பேருக்கும், 17, 18-ஆம் தேதிகளில் 115 பேருக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. அவா்களுடன் 10 மாவட்டத் தோ்தல் அதிகாரிகளும், 48 வாக்காளா் பட்டியல் அலுவலா்களும் செல்லவுள்ளனா்.
ஏற்கெனவே ஒரு குழுவுக்கு தில்லியில் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த குழுக்களுக்கு பயிற்சி வழங்கப்படவிருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
தில்லியில் பயிற்சி பெறும் வாக்குச்சாவடி அலுவலா்கள், தமிழகத்தில் மற்ற அலுவலா்களுக்கு தோ்தல் தொடா்பான பயிற்சிகளை வழங்குவா்.