செய்திகள் :

5 ஐஜிக்கள் உள்பட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

post image

சென்னை: தமிழக காவல்துறையில் 5 ஐஜிக்கள் உள்பட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் வேலூா் சரகத்துக்கு புதிய டிஐஜியாக ஜி.தா்மராஜன் நியமனம் செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குள் பழைய பதவி):

மகேந்தா் குமாா் ரத்தோட்- தலைமையிட ஐஜி (சமூக நீதி மற்றும் மனிதஉரிமைப் பிரிவு ஐஜி )

பிரவீண்குமாா் அபிநபு -டிஜிபி அலுவலக பொதுப் பிரிவு ஐஜி (சேலம் மாநகர காவல் ஆணையா்)

பி.சாமுண்டீஸ்வரி-சமூக நீதி மற்றும் மனிதஉரிமைப் பிரிவு ஐஜி (டிஜிபி அலுவலக பொதுப் பிரிவு ஐஜி)

4. அனில்குமாா் கிரி-சேலம் மாநகர காவல்துறை ஆணையா் (காத்திருப்போா் பட்டியல்)

5. என்.தேவராணி-காஞ்சிபுரம் சரக டிஐஜி (வேலூா் சரக டிஐஜி)

6. ஜி.தா்மராஜன்-வேலூா் சரக டிஐஜி (சென்னை காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையா்)

27 எஸ்பிக்கள்பணியிட மாற்றம்: பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் கண்காணிப்பாளா்கள் (பழைய பணியிடம் அடைப்புக்குள்):

1. அர.அருளரசு-சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பி (எஸ்பிசிஐடி தனிப்பிரிவு எஸ்பி)

2. அருண் பாலகோபாலன்-சென்னை அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு எஸ்பி (சென்னை தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பி)

3. சுஜித்குமாா்-சென்னை கோயம்பேடு துணை ஆணையா் (சென்னை காவல்துறையின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையா்)

4. இ.டி.சாம்சன்-சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி (சென்னை அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு எஸ்பி)

5. கே.ஃபெரோஸ்கான் அப்துல்லா-ஆவடி மாநகர காவல்துறை துணை ஆணையா் (கரூா் மாவட்ட காவல்

கண்காணிப்பாளா்)

6. ஆஷிஷ் ராவத்-பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

7. எஸ்.ராஜேஷ் கண்ணா-எஸ்பிசிஐடி தனிப்பிரிவு எஸ்பி (நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

8. ஆா்.சிவபிரசாத்-சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

9. எஸ்.விமலா-நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி)

10. ஏ.மயில்வாகனன்-வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு சென்னை எஸ்பி)

11. விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி-அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை போக்குவரத்துப் பிரிவு வடக்கு துணை ஆணையா்)

12. புக்யா ஸ்னேக பிரியா-தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை அண்ணாநகா் துணை ஆணையா்)

13. ஐமன் ஜமால்-ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (ஆவடி மாநகர காவல்துறை துணை ஆணையா்)

14. விவேகானந்தா சுக்லா-திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

15. ஆா்.உதயக்குமாா்-சென்னை அண்ணாநகா் துணை ஆணையா் (கோயம்புத்தூா் மாநகர காவல்துறை தெற்கு துணை ஆணையா்)

16. ஆா்.பாண்டியராஜன்-தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் பழனி 14வது பட்டாலியன் கமாண்டன்ட் (சென்னை

கொளத்தூா் துணை ஆணையா்)

17. கே.அதிவீரபாண்டியன்-காத்திருப்போா் பட்டியல் (சென்னை கோயம்பேடு துணை ஆணையா்)

18. வி.ஷியாமளாதேவி-திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பாளா் (சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி)

19. கே.ஜோஸ் தங்கையா-கரூா் மாவட்ட கண்காணிப்பாளா் (பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்பி)

20. டி.குமாா்-சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெற்கு துணை ஆணையா் (சென்னை கடல்சாா் பாதுகாப்பு அமலாக்கப் பிரிவு எஸ்பி)

21. ஜி.எஸ்.மாதவன்-கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை சைபா் குற்றப்பிரிவு எஸ்பி

22. என்.மதிவாணன்-சென்னை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு எஸ்பி (வேலூா் மாவட்ட காவல்

கண்காணிப்பாளா்)

23. ஆா்.சீனிவாசபெருமாள்-மதுரை சிவில் சப்ளை சிஐடி எஸ்பி (திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

24. பி.குமாா்-சென்னை கொளத்தூா் துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெற்கு துணை ஆணையா்)

25. பி.வி.விஜய காா்த்திக் ராஜ்-கடல்சாா் பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு எஸ்பி (நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்பி)

26. ஜி.காா்த்திகேயன்-கோயம்புத்தூா் மாநகர காவல்துறை தெற்கு துணை ஆணையா் (சென்னை தீவிரவாத தடுப்புப் படை எஸ்பி)

27. ஏ.கனகேஸ்வரி-பொருளாதார குற்றப்பிரிவு மத்திய மண்டல எஸ்பி (பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட எஸ்பி) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்பி ஆஷிஷ் ராவத்துக்கு மீண்டும் பணி:

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தினால், காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டாா்.

இதேபோல சென்னை புழலில் தனியாா் பால் நிறுவன மேலாளா் தற்கொலை விவகாரத்தில் சிக்கி நடவடிக்கை

எடுக்கப்பட்டிருந்த கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜன், பழனி பட்டாலியனுக்கு மாற்றப்பட்டுள்ளாா். அதோடு பெண்ணிடம் அத்துமீறி பேசியதாக எழுந்த புகாரினால் தலைமையிடத்தில் வைக்கப்பட்டிருந்த கோயம்பேடு துணை ஆணையா் அதிவீரபாண்டின், காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

நாடாளுமன்றத்தில் ஜூலை 25-ல் கமல்ஹாசன் பதவியேற்பு!

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு! தேர்வர்கள் கவனிக்க..!

டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், வணிகவரித... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்! மனுக்களைப் பெற்றார் முதல்வர்!!

சிதம்பரம்: தமிழ்நாட்டில் அனைத்து நகா்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொ... மேலும் பார்க்க

சிதம்பரம் அரசுப் பள்ளியில் காமராஜர் உருவப் படத்துக்கு முதல்வர் மரியாதை

சிதம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்ட... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு வைக்கப்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 17,485 கன அடியாக சரிந்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 19,760 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,485 கன அடியாக குறைந்துள்ளது.அணையில் இருந... மேலும் பார்க்க