சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: தில்லியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 95 ச...
5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்
ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.
குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் இன்று (மே 13) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளான கைலாசபுரம், மீனவர் குடியிருப்பு, செட்டித் தோட்டம், மற்றும் மீனாம்பாள் சிவராஜ் நகர் ஆகிய திட்டப்பகுதிகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சென்னையில் கைலாசபுரம் திட்டப்பகுதியில் ரூ. 63.34 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 392 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், மீனவர் குடியிருப்பு திட்டப்பகுதியில் ரூ. 75.22 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 520 அடுக்குமாடிகுடியிருப்புகளும், செட்டித் தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.45.36 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 243 அடுக்குமாடி குடியிருப்புகள், மீனாம்பாள் சிவராஜ் நகர் திட்டப்பகுதியில் ரூ. 46.72 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 308 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் “முதல்வர் ஸ்டாலினால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக 13 திட்டப்பகுதிகளில் ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளது.
திறந்து வைக்கப்படவுள்ள குடியிருப்புகளில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின் இணைப்பு, தண்ணீர் தொட்டிகள், சாலை வசதிகள் என அனைத்தும் முடிக்கப்பட வேண்டும், அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். முதல்வர் அவர்கள் திறந்து வைத்தவுடன் உடனுக்குடன் வீடுகள் ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்த பெரியோர்கள், உடன் நிலை பாதிக்கப்பட்டோருக்கு முதல், இரண்டு மடிகளை ஒதுக்க வேண்டும்.
வாரியத்தால் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பழுதடைந்த குடியிருப்புகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், ரூ.152.57 கோடி மதிப்பில் 51 ஆயிரம் குடியிருப்புகள் புனரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு, இதுவரை 30,387 குடியிருப்புகள் பழுதுபார்த்து, புனரமைப்பு செய்து, புதுப் பொலிவு பெற்றுள்ளன.
20,613 குடியிருப்புகளில் பணிகள் மேற்கொள்ளபட்டுவருகிறது. நடப்பாண்டு 2025-2026 ல் ரூ. 280 கோடி மதிப்பீட்டில் 137 திட்டப்பகுதிகளில் உள்ள 76,549 குடியிருப்புகள் பழுது நீக்கி, புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அனைவருக்கும் வீடு திட்டத்தில், 2014- 2021 வரை 6 ஆண்டு காலத்தில் ரூ. 2,438 கோடி மதிப்பில் 27, 668 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டது. 4 ஆண்டு திமுக ஆட்சியில் ரூ. 5 ,343.16 கோடி மதிப்பில் 46, 929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில், 6,417 குடியிருப்புகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 56,299 அடுக்குமாடி குடியிருப்புகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிக்க: பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு