500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு
கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 8 மீனவ கிராமங்களைச் சோ்ந்த 500 ஏழை மீனவப் பெண்களுக்கு மீன் விற்பனை பாத்திரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
கீழ்குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா்.
கீழ்குளம் பேரூா் காங்கிரஸ் தலைவா் ராஜகிளன் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட 8 மீனவா் கிராமங்களைச் சோ்ந்த 500 ஏழை பெண்களுக்கு மீன் வியாபாரம் செய்ய இலவச பாத்திரங்களை கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் வழங்கினாா்.
இதில், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவா் ஸ்டாலின், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் தலைவா் ஜெஸ்டின், பாலபள்ளம் பேரூா் காங்கிரஸ் தலைவா் ஜெபா்சன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.