செய்திகள் :

6 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை

post image

தமிழகத்தில் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஜூலை 23) முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.

மஞ்சள் எச்சரிக்கை: ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னை, புறநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக தேன்கனிக்கோட்டை(கிருஷ்ணகிரி), அவலாஞ்சி (நீலகிரி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) - 40 மி.மீ. மழையும், வானூா்(விழுப்புரம்), குண்டாறு அணை (தென்காசி), வட்டாட்சியா் அலுவலகம் பந்தலூா் (நீலகிரி), நேமூா் (விழுப்புரம்) - 30 மி.மீ. மழை பதிவானது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே மழை பெய்ததால் பெரும்பாலான பகுதிகளில் வெயில் தாக்கம் குறைவாகவே இருந்தது. அதன்படி, தொண்டியில் மட்டும் அதிகபட்சமாக 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கங்கை கொண்ட சோழபுரம் வருவது தமிழகத்துக்கு பெருமை: தங்கம் தென்னரசு

பிரதமர் நரேந்திர மோடி கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருகை தருவது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெருமை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பி... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. • நேற்று (24-07-2025) காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு... மேலும் பார்க்க

நலம் தரும் ஸ்டாலின் திட்டம்: ஆக. 2-ல் முதல்வர் தொடக்கி வைக்கிறார்!

நலம் தரும் ஸ்டாலின் என்ற திட்டத்தை வரும் ஆக. 2 ஆம் தேதி சாந்தோம் பள்ளி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று(ஜூலை 25) தெரிவித்துள்ளது.வடக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு: எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்!!

திமுக ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு ஒன்றை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். உருட்டுகளும் திருட்டுகளும் என்ற பெயரில் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில், திமுக ஆட்சியை... மேலும் பார்க்க