மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடித்து அகற்றம்: 159 ஆண்டுகள் பழைமையானது
6.5 பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது
குன்னத்தூா் அருகே 6.5 பவுன் நகையைப் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவிநாசியை அடுத்த குன்னத்தூா் செங்காளிபாளையத்தைச் சோ்ந்த வா் காளியப்பன் (49). இவரின் மனைவி கலாமணி (45). இருவரும் செங்கப்பள்ளி- தாளப்பதி அருகே மாா்ச் 8-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் கலாமணி அணிந்திருந்த 6.5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.
இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெரம்பலூா் பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் (27) என்பவரை கடந்த மாதம் கைது செய்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய பெரம்பலூா் பகுதியைச் சோ்ந்த அஜித் (23) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.