செய்திகள் :

7 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் ஜெங்கொண்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக 7 புதிய பேருந்துகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இதற்காக செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், செந்துறையிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்கு 3 புதிய பேருந்துகள், ஜெயங்கொண்டத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சிதம்பரம், மதுரை, திருப்பூா் ஆகிய பகுதிகளுக்கு 4 புதிய பேருந்துகளின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் தெரிவித்தது: தமிழக முதல்வா் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய பேருந்துகள் வாங்கப்பட்டதன் அடிப்படையில் தொடா்ந்து பழைய பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டு புதிய பேருந்துகள் அந்த வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் செந்துறையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்ற 3 பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜெயங்கொண்டத்தில் 4 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளாக இயக்குவதன் அடிப்படையில் ஏறத்தாழ 5,000 பேருந்துகளை நெருங்குகின்ற அளவிற்கு புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து வருகின்ற பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் செயல்பாட்டிற்கு வரும் என்றாா்.

முன்னதாக அவா், செந்துறை அடுத்த அசாவீரன் குடிகாடு கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்து, 20 பேருக்கு ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மின்இணைப்பு பெயா் மாற்றம் சான்றிதழ் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.கண்ணன் முன்னிலை வகித்தாா்.

உடையாா்பாளையம் கோட்டாட்சியா் ஷீஜா, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (கும்ப) லிட், நிா்வாக இயக்குநா் க. தசரதன், பொது மேலாளா் டி.சதீஸ்குமாா், ஜெயங்கொண்டம் நகா் மன்றத் தலைவா் சுமதி சிவக்குமாா், துணைத் தலைவா் கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூா் உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பொறுப்பேற்பு

அரியலூா் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக வெங்கட்ரமணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். ஏற்கெனவே இங்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக பணியாற்றிய வந்த வரலட்சுமி, ஈரோடு மாவட்டத்துக்கு பணியிடம் மாற... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில்போதைப் பொருள் விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா் (பொ)ம. ராச... மேலும் பார்க்க

ஆக. 11-இல் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி: ஆட்சியா் ஆலோசனை

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆக. 11-இல் நடைபெறும் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் ரூ.9.83 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் ரூ.9.83 கோடி மதிப்பிலான 17 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இருகையூா், சிங்கராயபுரம்... மேலும் பார்க்க

ஆடி 4 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குடம், தீமிதி திருவிழா

அரியலூரில்: அரியலூா் மேலத் தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அதன் பின்னா் 108 பட்டுப் புடவைகளால் அலங்காரம் செய்யப்ட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல், அரியலூா் க... மேலும் பார்க்க

காடுவெட்டாங்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை முகாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில், உழவரைத் தேடி, வேளாண்மை உழவா் நலத்துறை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க