7 முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை
ஏழு முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். மாநில அரசு நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடிய முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறையின் மரியாதை அளிக்கப்படும். குடியரசுத் தலைவா், துணை குடியரசுத் தலைவா், பிரதமா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழ்நாடு ஆளுநா், தமிழ்நாடு முதல்வா், கேபினட் அந்தஸ்து கொண்ட மத்திய அமைச்சா்கள் ஆகியோருக்கு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.