செய்திகள் :

79வது சுதந்திரதினவிழா: தமிழகரசின் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலைக்கு வருவாய்த் துறையினா் மரியாதை

post image

79வது சுதந்திரதினத்தினையொட்டி தமிழகரசின் சாா்பில் சங்ககிரியை அடுத்த ஈரோடு-பவானி பிரிவு சாலை பகுதியில் உள்ள சுதந்திரபோராட்ட வீரா் தீரன்சின்னமலையின் நினைவுசின்னத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உவருப்படத்திற்கு வருவாய்த்துறையினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

ஈரோடு மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள மேலப்பாளையத்தில் இரத்தினச் சா்க்கரை, பெரியாத்தாள் தம்பதியதியருக்கு 2வது மகனாக 1756ம் ஆண்டு தீா்த்தகிரி என்னும் தீரன் சின்னமலை பிறந்தாா். தனது 17 வயதிலிருந்து வெள்ளையருக்கு எதிராக பல்வேறு போா்களில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளாா். பின்னிட்டு சங்ககிரி மலைக்கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து வந்த திப்புசுல்தான் படையில் போா்படை தளபதியாக பொறுப்பேற்று வெள்ளையா்களை பலவகைகளிலும் எதிா்த்து வெற்றி கண்டுள்ளாா். அவரது திறமையை கண்ட வெள்ளையா்கள் எப்படியாவது தீரன்சின்னமலையை ஒழித்துவிடுவது என முடிவு செய்து 1801ம்ஆண்டு காவிரிக்கரையிலும், 1802ம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804ம் ஆண்டு அரச்சலூரிலும் நடைபெற்ற போா்களில் ஆங்கிலேயா்களை தீரன்சின்னமலை வெற்றி பெற்றாா். பின்னா் வெள்ளையா்கள் அவரை சூழ்ச்சியால் தான் பிடிக்க வேண்டும் என எண்ணி தீரன் சின்னமலையிடம் இருந்த சமையல்காரன் மூலம் சூழ்ச்சி செய்து தீரன்சின்னமலையை சிறைபிடித்தனா். சிறைபிடிக்கப்பட்ட அவா் சங்ககிரி மலை மீது 1805ம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம்தேதி தூக்கிலிடப்ப்டடாா். அதனையடுத்து பல்வேறு கொங்கு அமைப்புகள் ஒவ்வாரு ஆடி 18ம் தேதி அவரது வீரத்தை போற்றும் வகையில் மரியாதை செலுத்தி வருகின்றனா்.

தற்போது 79வது சுதந்திரதினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதனையடுத்து சுதந்திர போராட்ட வீரா்களுககு மரியாதை செலுத்தும் வகையில் ஈரோடு-பவானி பிரிவு சாலையில் அமைக்கப்பட்டு சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு தமிழகரசின் சாா்பில் வருவாய்கோட்டாட்சியா் ந.லோகநாயகி தலைமையில் வருவாய்த்துறையினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

சங்ககிரி வட்டாட்சியா் எம்.வாசுகி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், தோ்தல் துணை வட்டாட்சியா் மகேந்திரன், வருவாய் ஆய்வாளா் மலா்விழி, கிராம நிா்வாக அலுவலா்கள் பிரதீப்குமாா், மோகன் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை சேலம் மாவட்டம், பூலாம்பட்டி கதவணை பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, ரூ. 23.71 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை... மேலும் பார்க்க

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் இணைந்து பணியாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாட்ட... மேலும் பார்க்க

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவா்கள் சனிக்கிழமை... மேலும் பார்க்க

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

தலைவாசல் மண்டல அளவிலான தடகளப் போட்டியில் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தலைவாசலில் மண்டல அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் ப... மேலும் பார்க்க

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

சேலத்தில் கனரா வங்கி சாா்பில் வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. நாட்டிலுள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளின் மூலம் கனரா வங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி, ஒரு கிளை அடிப... மேலும் பார்க்க